இறுதிச்சடங்கின்போது சவப்பெட்டிக்குள் திடீரென நகர்ந்த சடலம்… திடுக்கிட வைத்த ஒரு சம்பவம்

லெபனான் நாட்டில், இறுதிச்சடங்கின்போது சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த நபர் நகர்வதைக் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

லெபனான் நாட்டிலுள்ள Hermel நகரில், இறந்த ஒருவரை சவப்பெட்டியில் வைத்து இறுதிச்சடங்குக்காக தயார் செய்துகொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது பெண் ஒருவர் அந்த உடலை தொட்டபடி அழுதுகொண்டிருந்திருக்கிறார். திடீரென இறந்த அந்த நபரின் உடல் நகர்வதையும், அவர் சுவாசிப்பதையும் கண்ட மக்கள் பதறிப்போய் அவருக்கு முதலுதவி அளித்ததுடன், ஆம்புலன்சையும் வரவழைத்துள்ளனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த நபர் யார், அவர் இறந்ததாக அறிவித்தது யார் என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

The post இறுதிச்சடங்கின்போது சவப்பெட்டிக்குள் திடீரென நகர்ந்த சடலம்… திடுக்கிட வைத்த ஒரு சம்பவம் appeared first on NEWSPLUS Tamil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 Views