இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து! பரபரப்பு காட்சி

ஐரோப்பிய நாடான செக் குடியரசில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

Domazlice நகரத்திற்கு அருகே காலை 8 மணிக்கு இந்த கோர விபத்து நடந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்தள்ளனர்.

ஜேர்மனியின் முனிச் நகரிலிருந்து செக் குடியரசின் தலைநகர் Prague நோக்கி வந்த சர்வதேச அதிவேக பயணிகள் ரயிலும், உள்ளூர் ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக செக் குடியரசின் ரயில்வே தெரிவித்துள்ளது.

#Czech :Two people died in a train collision near Domažlice, seven are in critical condition, 31 are out of danger. pic.twitter.com/EBG3jvQXpD

— Wᵒˡᵛᵉʳᶤᶰᵉ Uᵖᵈᵃᵗᵉˢ𖤐 (@W0lverineupdate) August 4, 2021

இந்த விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர், 7 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், கிட்டதட்ட 40 பேர் காயமடைந்ததாக மீட்பு குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் பணியில் நான்கு ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டு வருகிறதாம்.

நிறுத்துமாறு சிக்னல் போட்டிருந்த போதிலும் ஜேர்மனியிலிருந்து வந்த tothe எக்ஸ்பிரஸ் ரயில், வேகமாக  உள்ளூர் பயணிகள் ரயில் மீது மோதியதாக செக் குடியரசின் போக்குவரத்து அமைச்சர் Karel Havlicek ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

The post இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து! பரபரப்பு காட்சி appeared first on NEWSPLUS Tamil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 Views