இலங்கை அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஜாம்பவான் முரளிதரன்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் தொடரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் நிறைவு பெற்ற நிலையில் தொடரை இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் அடுத்த தொடரான 3 போட்டிகள் கொண்ட இருபது-20 சர்வதேச தொடர் தற்போது நடைபெற்று.

இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் இறுதியாக நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி இலகுவான முறையில் வெற்றி ஒன்றை பதிவு செய்தது. இந்நிலையில் இலங்கை அணியின் வெற்றியை வைத்து இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவருமான முத்தையா முரளிதரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றியை பெற்றிருப்பதால் அது இலங்கைக்கு நம்பிக்கைகளை கொடுக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். ஆகவே 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி அவதானம் காக்க வேண்டும் எனும் கருத்தும் முரளியிடம் இருந்து வந்திருக்கிறது.

இந்த ஆட்டத்தை அவர்கள் வெல்ல முடியும் என்று கடைசி ஆட்டத்தில் இருந்து அவர்களுக்கு நம்பிக்கை கிடைத்திருக்கும், இதனால் அவர்களுக்கு நம்பிக்கையும் கிடைத்திருக்கும். இது ஒரு புதிய தொடர் மற்றும் திட்டமிடல் மாறும், வீரர்களும் மாறக்கூடும். ஆதலால் இலங்கையும் வலுவாக வரும் ‘என்று முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

The post இலங்கை அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஜாம்பவான் முரளிதரன் appeared first on NEWSPLUS Tamil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 Views