ரிஷாத் வீட்டுக்குள் என்ன நடக்கிறது? விசாரணையில் அம்பலமாகும் பல உண்மைகள்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஹிஷாலினி உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நால்வர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை 25 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனை மற்றும் தரகர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகள், ரிஷாத்தின் மனைவி உள்ளிட்டோரின் தொலைபேசி அறிக்கைகள், வைத்தியசாலை கட்டில் பதிவு அட்டை ஆகியவற்றின் அடிப்படையிலும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில் நேற்று பொலிஸாரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ரிஷாத்தின் வீட்டில் வேலை செய்யும் சேவகன் ஒருவர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே ரிஷாத்தின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த 22 வயது யுவதி ரிஷாத்தின் மைத்துனரால் இரு தடவைகள் பாலியல் துஷ்பியோகம் செய்யப்பட்டதாக குறித்த யுவதியால் வாக்குமூலம் வழங்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்த பொலிஸார் ஹிஷாலினியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நாட்பட்ட பாலியல் ஊடுருவல் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

The post ரிஷாத் வீட்டுக்குள் என்ன நடக்கிறது? விசாரணையில் அம்பலமாகும் பல உண்மைகள் appeared first on NEWSPLUS Tamil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 Views