சற்று முன் இடம்பெற்ற கோர விபத்து. கு. தலைவர் உயிரிழப்பு !!

மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பின் இருக்கையில் அமர்ந்து சென்றவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நெல்லியடி பகுதியில் இந்தச் சம்பவம் இன்று (22) இரவு 7 மணி அளவில் இடம்பெற்றதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த வீரவாகுப்பிள்ளை கெங்கேஸ்வரன் (வயது-32) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post சற்று முன் இடம்பெற்ற கோர விபத்து. கு. தலைவர் உயிரிழப்பு !! appeared first on NEWSPLUS Tamil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 Views