பாதுகாப்பற்ற பண்ணைகளினால் மக்கள் சிரமம்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலக பிரிவில் உள்ள இலுப்பை கடவை பகுதியில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் உரிய பாதுகாப்பு நடை முறை இன்றி அமைக்கப்பட்டு பராமாிப்பு இன்றி காணப்படும் நண்டு மற்றும் அட்டை வளர்ப்பு  பண்ணைகளினால்  பல்வேறு   பிரச்சினைகளுக்கும், சுகாதார சீர்கேடுகளுக்கும முகம் கொடுப்பதாகவும் இலுப்பைக் கடவை பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இலுப்பை கடவை பகுதியில் அரச மானியத்தில் மக்கள் குடியிருக்கும் பகுதியில் மிக ஆழமான  குழிகள் தோண்டப்பட்டு வீடுகளின் எல்லைகளிலும் பின்பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள குறித்த பண்ணைகள் மற்றும் பண்ணைகளுக்கு நீர் பெற்றுக்கொள்ள வெட்டப்பட்ட பாதுகாப்பற்ற வாய்கால் காரணமாகவும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதுடன் வாழ்வாதார தொழில் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் குறித்த பகுதியில் அட்டை மற்றும் நண்டு பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் பெண் தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த பெண்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த பண்ணை அமைக்கப்பட்டு பண்டுகள் அமைக்கப்பட்ட காலப்பகுதியில் இருந்து மழை நீர் கடலுடன் கடக்க முடியாத நிலையில் மக்கள் குடியிருப்புக்களில் புகுந்து பாரிய சேதங்களை ஏற்படுத்துவதாகவும் கடல் நீர் மற்றும் மழை நீர் சேர்ந்து துர் நாற்றம் வீசுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் கடலுக்கு செல்லும் நடை பாதைகளை மறித்து பண்ணைகள் அமைக்கப்படாமையினால் பல கிலோமீற்றர்கள் சுற்றியே தற்போது கடலுக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ள அதே நேரம் கடல் நீர் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நிழைவதனால் நன்னீர் உவர் நீராக மாறி உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்

குறித்த பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலளரிடன் தெரியப்படுத்தியும் இதுவரை ஒழுங்கானபாதுகாப்பு நடவடிக்கையோ மாற்று நடவடிக்கையோ மேற்கொண்டு தரவில்லை எனவும் குற்றம் சுமத்துகின்றனர்

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வாறு மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இவ்வாறான பண்ணை அமைக்க அனுமதி வழங்கினார்கள்? எனவும் அவ்வாற பண்ணையின் பாதுகாப்பு நடை முறை பின் பற்றப்படாத நிலையில் ஏன் இது வரை நடவடிக்கை மேற்கொள்ள வில்லை எனவும் தெளிவு படுத்த வேண்டும் எனவும் விரைவில் உரிய முறையில் பராமாிப்பற்ற வகையில் காணப்படும் பண்ணைகளை மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வே;ணடம் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினவிய போது,,
 குறித்த பகுதியில் அமைக்கப்பட்ட பண்ணைகளுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது தொடர்பாக உரிய திணைக்களங்களுக்கு விளக்கம் கோரி கடித்தம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விபரங்கள் கிடைக்க பெற்ற பின்னர் மேலதிக நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

The post பாதுகாப்பற்ற பண்ணைகளினால் மக்கள் சிரமம் appeared first on GTN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Views