இன்று அதிகாலை முதல் 12 மாவட்டங்களில் 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம்

 

யாழின் சில பகுதிகள் உள்ளடங்கலாக நாட்டின் 12 மாவட்டங்களுக்கு உட்பட்ட 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று அதிகாலை 4 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாவற்காடு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனை கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏறாவூர் 2 மற்றும் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு மற்றும் மாஞ்சோலை பதுரிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், அம்பாறை மாவட்டத்தின் Nawa Walathapitiya கிராமம், புத்தளம் மாவட்டத்தின் Marakkalagama, நுவரெலியா மாவட்டத்தின் கரோலினா தோட்டத்திற்கு உட்பட்ட கடவல தோட்ட பிரிவு மற்றும் கொழும்பு மாவட்டத்தின் தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆராமய பகுதியின் 66 ஆவது தோட்டம் ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் கம்பஹா மாவட்டத்தின் 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், இரத்தினபுரி மாவட்டத்தின் 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், களுத்துறை மாவட்டத்தின் 2 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், மாத்தளை மாவட்டத்தின் 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு உட்பட்ட தலா ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, நாட்டின் 12 மாவட்டங்களுக்கு உட்பட்ட 82 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Views