கந்தளாய் தள வைத்தியசாலைக்கு வைத்திய ஜி.எஸ்.கொஸ்தாவை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தியோகத்தர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

எப்.முபாரக் 

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் தள வைத்தியசாலைக்கு வைத்திய ஜி.எஸ்.கொஸ்தாவை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களினால் எதிர்ப்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நேற்று (17) மாலை கந்தளாய் தள வைத்தியசாலை முன்றலில் இடம்பெற்றது.

இதில் வைத்தியசாலை பணிப்பாளராக தற்போது கடமையாற்றும் சதிஸ்குமாரை நியமிக்குமாறும் கொஸ்தாவை இடமாற்றுமாறும் கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

இதில் 75 க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.

திருடன் கொஸ்தாவை இடமாற்று,சதிஸ்குமாரை நியமித்து தா,திருடன் வேண்டாம் போன்ற வாசகங்களை ஏந்திருந்தார்கள்.

இவ்வார்ப்பாட்டத்தில் திருகோணமலை மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகர உட்பட பலரும் கலந்து கொண்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.

The post கந்தளாய் தள வைத்தியசாலைக்கு வைத்திய ஜி.எஸ்.கொஸ்தாவை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தியோகத்தர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..! appeared first on Sri Lanka Muslim.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Views