சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்து குருநகரில் பதுங்கியிருந்தவர்கள் கைது

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் நுழைந்து யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் பதுங்கியிருந்த நாலு பேர் கொண்ட குடும்பம் ஒன்றினைகாவல்துறையினர் கைது செய்து சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலின் கீழ் தனிமைப்படுத்தி உள்ளனர். 

தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் அரிச்சலூர் இடைத்தங்கல் முகாமில் வசித்து வந்த வயோதிப பெண் , அவரது மகள் மற்றும் இரு பேரக்குழந்தைகள் ஆகிய நால்வரும் படகு மூலம் நாட்டுக்குள் நுழைந்து குருநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்துள்ளனர். 

இது தொடர்பில் அறிந்து கொண்ட காவல்துறையினர் மற்றும் சுகாதார பிரிவினர் குறித்த வீட்டிற்கு சென்று நான்கு பேரையும் கைது செய்து , தனிமைப்படுத்தி உள்ளத்துடன் , அவர்களிடமிருந்து பீ.சி,ஆர் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகளை அடுத்தே மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

The post சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்து குருநகரில் பதுங்கியிருந்தவர்கள் கைது appeared first on GTN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Views