யாழில் இன்று 16பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் என்பவற்றில் 396 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன அதில் 16 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேரும், (4 பேரும் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள்) யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பேரும்,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட மூவருக்கும்,  சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கும் , (அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள். ஒருவர் அரச திணைக்களம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் கைதடியைச் சேர்ந்தவர்) கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் என 16 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

The post யாழில் இன்று 16பேருக்கு கொரோனா appeared first on GTN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Views