பெங்களூர் 10 விக்கெட்டுக்களால் வெற்றி – புள்ளிப் பட்டியலில் முதலிடம்

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் பெங்களூர் அணி , ராஜஸ்தான் அணியினை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது

நாணயச்சுழற்சியில் வென்ற பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பினை தொிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல் சலஞ்சர்ஸ் அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து, 178 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கினை அடைந்து புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

தேவ்தத் படிக்கல் 101 ஓட்டங்களுடனும் கோலி 72 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பெங்களூர் 10 விக்கெட்டுக்களால் வெற்றி – புள்ளிப் பட்டியலில் முதலிடம் appeared first on GTN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Views