45 ஓட்டங்களால் சென்னை வெற்றி

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 12-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 45 ஓட்ட வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பினை தொிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களின் முடிவில் 9 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்களை எடுத்தது.

இதனைத் தொடர்ந்து, 189 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் 20 ஓவரில் 143 ஓட்டங்களை மட்டுமே எடுத்ததனால் சென்னை அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அ வெற்றி பெற்றது. இது சென்னை அணியின் 2வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

The post 45 ஓட்டங்களால் சென்னை வெற்றி appeared first on GTN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

22 Views