எதிர்வரும் 18 ம் திகதி வரை ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விளக்கமறியலில்..!
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் புத்தளம் மத்ரசா பாடசாலையின் அதிபர் மொஹமட் சகீல் ஆகியோர் எதிர்வரும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த சந்தேகநபர்கள் இன்று -03- முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியமை மற்றும் புத்தளம் பிரதேசத்தில் மத்ரசா பாடசாலையொன்றினுள் தீவிரவாதம் கற்பித்தமை ஆகிய குற்றசாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post எதிர்வரும் 18 ம் திகதி வரை ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விளக்கமறியலில்..! appeared first on Sri Lanka Muslim.