உடல் அடக்கம் செய்வதற்கான தடையை நீக்கியதற்காக பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவிப்பு… அமெரிக்க தூதுவர் வரவேற்பு.

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம்
செய்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கும் இலங்கை அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்பை தாம் வரவேற்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கும் உத்தியோகபூர்வ அறிவிப்பினை தாம் வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் துன்பங்களைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கையினை உடனடியாக செயற்படுத்தப்படுமென தாம் நம்புவதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

The post உடல் அடக்கம் செய்வதற்கான தடையை நீக்கியதற்காக பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவிப்பு… அமெரிக்க தூதுவர் வரவேற்பு. appeared first on Sri Lanka Muslim.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 Views