யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியருக்கு கொரோனா – சிறப்புக்குழு கண்காணிப்பில்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதனையடுத்து வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர், மருத்துவர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்தார்.

மருத்துவ வல்லுநருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டமை தொடர்பில் எவரும் அச்சமடையத் தேவையில்லை எனவும், வைத்தியசாலையில் உரிய சுகாதார நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்றும்  குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் மேலும் தெரிவித்ததாவது;

நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற பிசிஆர் பரிசோதனையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற மருத்துவ வல்லுநர்களின் கலந்துரையாடலின் அடிப்படையில் கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவ வல்லுநர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையின் செயற்பாடுகள் அனைத்தும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக எந்தவிதமான இடையூறுகளும் இன்றி நடைபெறுகின்றன.

அவற்றை தொடர்ந்து கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் நோயாளிகளைப் பார்வையிடுவது தொடர்பில் சுகாதார அமைச்சினால் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றை பின்பற்றி மருத்துவ சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுகின்றன  என்றார்

அதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகஸ்தர் மற்றும் நோயாளியொருவருக்கு அன்டிஜன் பரிசோதனையில் கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் வைத்திய நிபுணர் ஒருவர் கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது , தாதிய உத்தியோகஸ்தர் மற்றும் நோயாளி ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அவர்கள்இருவரது மாதிரி உட்பட சிலரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது.
அதன் முடிவுகள் இன்றைய தினம் இரவு வெளியாகும் என தெரிவிக்கபட்டது.

இதேவேளை யாழ்.போதனா வைத்திய சாலையின் சுகாதார நடைமுறைகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு , கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், நடைமுறைகளையும் இறுக்கமாக்கப்பட்டுள்ளது. #யாழ்_போதனாவைத்தியசாலை #மருத்துவ_வல்லுநர் #கொரோனா #தாதி

The post யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியருக்கு கொரோனா – சிறப்புக்குழு கண்காணிப்பில்! appeared first on GTN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Views