தடுப்பூசி பெற்றுக்கொண்ட யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று  திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றி வரும் நரம்பியல் மருத்துவ வல்லுநருக்கே கொவிட் -19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர் கொழும்பு சென்று திரும்பிய நிலையில் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுவதாக தாமே முன்வந்து பிசிஆர் பரிசோதனையை முன்னெடுத்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, கொவிட் -19 தடுப்பூசியின் முதலாவது டோஸை அவர் அண்மையில் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #தடுப்பூசி #யாழ்_போதனாவைத்தியசாலை #மருத்துவருக்கு #கொரோனா

The post தடுப்பூசி பெற்றுக்கொண்ட யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவருக்கு கொரோனா! appeared first on GTN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Views