117 கொரோனா தொற்றாளர்கள் குணமடைவு | Virakesari.lk

Published by T. Saranya on 2020-10-31 16:29:27

நாட்டில் இன்றையதினம் மேலும் 117 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில், நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை மற்றும் தெல்தெனிய வைத்தியசாலையிலிருந்தும் தலா 26 பேரும், 22 பேர் இரணவில வைத்தியசாலையிலிருந்தும்,13 பேர் ஹோமாகம வைத்தியசாலையிலிருந்தும், 10 பேர் காத்தான்குடி வைத்தியசாலையிலிருந்தும், 9 பேர் வெலிகந்த வைத்தியசாலையிலிருந்தும்,கொஸ்கம வைத்தியசாலை மற்றும் தன்னொட்டுவ வைத்தியசாலையிலிருந்து தலா மூன்று பேரும், அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை மற்றும்  ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையிலருந்து தலா இரண்டு பேரும், ஒருவர் றம்புக்கண வைத்தியசாலையிலிருந்தும்பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,282 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 10,424 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  அதில் 6,005 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன் 399 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 20 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Source link

The post 117 கொரோனா தொற்றாளர்கள் குணமடைவு | Virakesari.lk appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

47 Views