வியாட்நாம் புயலில் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு, பலர் உயிரிழப்பு …

வியாட்நாமில் Molave எனும் புயல் ஏற்படுத்திய பாதிப்பினால் 35 உயிரிழந்துள்ளதாகவும் நிலச்சரிவில் பலர் காணாமல் போகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிஇருக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட Quang Nam மாகாணமும் தற்போதைய நிலச்சரிவில் சிக்கியுள்ளது. முன்னதாக, இந்தவெள்ளத்தில் அம்மாகாணத்தை சேர்ந்த 136 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த சூறாவளியினால் 56,000 வீட்டுக் கூரைகள் சேதமடைந்திருக்கிறது. அத்துடன், Quang Ngai மாகாணத்தில் உள்ள 17 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கையைஇச்சூறாவளி பாதித்திருக்கிறது. Quang Nam மாகாணமும் இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆயிரம் மக்கள் தற்காலிக முகாம்களில்தங்கவைக்கப்பட்டுள்ளனர். 2008 முதல் 2018 வரையிலான காலக்கட்டத்தில், பேரிடர்கள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட 80 சதவீத இடம்பெயர்வு ஆசிய- பசிபிக் பகுதியிலேயேநடந்திருப்பதாக சமீபத்தில சர்வதேச அகதிகள் சட்டத்திற்கான Kaldor மையம் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், ஆசிய– பசிபிக் நாடுகளில் ஒன்றான வியாட்நாமில்இப்புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் வியாட்நாமை தாக்கிய புயல்களில் மிக மோசமான புயல் இது எனக் கூறப்படுகின்றது. தற்போது உயிரிழந்தவர்களில் 12 பேர் மீனவர்கள் என்றும் மேலும் 14 மீனவர்கள் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வியாட்நாம் புயலில் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு, பலர் உயிரிழப்பு … appeared first on Tamilcnn – Tamil News – Tamil Cinema – Tamil Songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

42 Views