யாழ்ப்பாணத்தில் ஆறு பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் நேற்று (30.10.2020) ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 340 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், வடக்கில் 8 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த மூவர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். ஊர்காவற்றுறை பகுதியை சேர்ந்த அவர்கள் கொழும்பில் தனியார் உணவகத்தில் தொழில் புரிந்து தற்போது வீட்டுக்கு வந்துள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் தொற்று உறுதியானது.

யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – நல்லூர் பகுதியில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். இவர் கொழும்பில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர். தற்போது யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளார்.

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்து தொற்று உறுதியானவரின் மனைவியும் மகளுமே நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

முல்லைத்தீவில் இருவருக்கு தொற்று

முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு சேர்ந்த இருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்தவர்கள்.

இதேவேளை ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தென்பகுதியை சேர்ந்தவர்கள் தற்போது மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 7 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு இன்னும் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

உடுவில் பகுதியை சேர்ந்த தந்தை, தாய், மகள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வரும் உடுவில் வாசியொருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில், அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்த அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில், ஏற்கனவே அடையாளம் காணப்படடவரின் மனைவி, மகள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

The post யாழ்ப்பாணத்தில் ஆறு பேருக்கு புதிதாக கொரோனா தொற்று appeared first on jaffnavision.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

46 Views