மீன்பிடிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக பலி

கிளிநொச்சி நாச்சிக்குடாவில் கடல் தொழிலுக்குச் சென்ற இளம் குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

 

இன்று சனிக்கிழமை குறித்த மீனவர் நாச்சிக்குடா கடற்பரப்பில் களங்கட்டி பணியில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மீனவர் நீரில் மூழ்கியதையடுத்து ஏனைய மீனவர்களின் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட மீனவர் முழங்காவில் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையாவார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை நாச்சிக்குடா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source link

The post மீன்பிடிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக பலி appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

44 Views