மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார்…

கொவிட் வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையின் போது , மாத்திரைகளையோ அல்லது வேறு எதுவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று வைத்தியர்களும், சுகாதார பரிசோதகர்களும் தெரிவித்திருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

பி.சி.ஆர் பரிசோதனை என்ற போர்வையில் நேற்று முன்தினம்(29) இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாகவே அவர் இதனை தெரிவித்தார். பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதாக கூறி மஹவ கெத்தபஹூவ என்ற இடத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாகவே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம்(29) மாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் போது வீட்டிலிருந்த மூன்றரை பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு எதிர்நோக்கியுள்ள நிலைமையில் இவ்வாறான மோசடிகளில் சிலர் ஈடுப்படுகின்றனர். இந்த மோசடிக்காரர்கள் தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஏதேனும் சந்தர்ப்பத்தில் சுகாதார பரிசோதகர்கள் வந்தால் எந்த சந்தர்ப்பத்திலும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக மாத்திரைகளையோ அல்லது வேறு எந்த மருந்துகளையோ தரமாட்டார்கள். இதனை வைத்தியர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உறுதி செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

குறிப்பிட்ட கொள்ளை சம்பவத்தின் போது பி.சி.ஆர் பரிசோதனை என்ற போர்வையில் மூவர் அந்த வீட்டிற்குள் பிரவேசித்துள்ளனர். இவர்களில் ஒருவர் பெண் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பரிசோதனைக்காக மாத்திரைகளை வழங்கியுள்ளனர். அதனை உட்கொண்ட பின்னர் அவர்கள் நித்திரையாகி உள்ளனர். காலையில் பார்த்த போதே தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதை கணடறிந்துள்ளனர். பொலிஸ் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். மஹவ பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

The post மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார்… appeared first on Leading Tamil News Website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

46 Views