பொறுப்புக் கூறல் விடயத்தில் சுகாதார அமைச்சர் பொறுப்பற்ற விதமாக செயற்படுகிறார் – முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

Published by T. Saranya on 2020-10-31 14:47:49

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கம் கட்டுப்படுத்தல் மற்றும் பொறுப்பு கூறல் விடயத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி  பொறுப்பற்ற விதமாக செயற்படுகிறார்.

சுகாதார அமைச்சின் செயற்பாடுகள்  மக்களின் எண்ணப்பாடுகளுக்கு முரணாக உள்ளது என அபயராம விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் முதலாம் தொற்றுக்கு  வைத்தியர்கள், பொலிஸ் சேவையாளர்கள் உள்ளாகவில்லை. ஆனால் தற்போது நிலைமை பாரதூரமாக காணப்படுகிறது.

மினுவாங்கொட மற்றும் பேலியகொட  மீன் சந்தையில் இருந்து பரவியுள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு  வைத்தியர்,பொலிஸ் சேவையாளர்கள்  உள்ளாகியுள்ளார்கள்.

வைத்திய சேவையாளர்கள் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை சுகாதார துறைக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், பொறுப்பு கூறல் விடயத்திலும்  சுகாதார அமைச்சர் பொறுப்பற்ற விதமாக செயற்படுகிறார்.

தகுதியுள்ளவர்கள் சுகாதார அமைச்சில் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படவில்லை. இதுவே பல பிரச்சினைகளுக்கு  மூல காரணம்  என்றார்.

Source link

The post பொறுப்புக் கூறல் விடயத்தில் சுகாதார அமைச்சர் பொறுப்பற்ற விதமாக செயற்படுகிறார் – முருந்தெட்டுவே ஆனந்த தேரர் appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

34 Views