பொதுமக்கள் உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் –  உலக சுகாதார ஸ்தாபனம்

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் மிகவேகமாகப் பரவலடைந்துவரும் நிலையில், எங்களுடைய நடத்தைகளே நோய்த்தொற்றின் பரவல் வீதம் எவ்வாறு இருக்கப்போகிறது என்பதைத் தீர்மானிக்கும்.

எனவே பொதுமக்கள் உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சிறிய மாற்றத்தினால் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியிருக்கிறது.

நாடளாவிய ரீதியில் மீண்டும் கொவிட் – 19 கொரோனா வைரஸ் மிகவேகமாகப் பரவிவரும் நிலையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை அலுவலகம் அதன் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கும் குறுகிய காணொளியொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறது. அதனூடாக பொதுமக்களிடம் பின்வரும் விடயங்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்திருக்கிறது.

கொரோனா வைரஸ் மிகவேகமாகப் பரவலடைகின்றது. நோய்த்தொற்றின் பரவல் வீதம் எவ்வாறு இருக்கப்போகின்றது என்பதை எங்களுடைய நடத்தைகளே தீர்மானிக்கும்.

எனவே வைரஸ் தொற்றுப்பரவலைக் குறைப்பதற்காக உடல் நலக்குறைவாக உணர்ந்தால் வீடுகளிலேயே இருங்கள். கைகளை அடிக்கடி சவர்க்காரத்தைப் பயன்படுத்தி கழுவுவதுடன் மதுசாரம் கலந்த கை சுத்திகரிப்பானை பயன்படுத்துங்கள். முகக்கவசம் அணிவதுடன் ஏனையோருடன் குறைந்தபட்சம் ஒரு மீற்றர் இடைவெளியினைப் பேணுங்கள். விழிப்புடன் இருங்கள்.

சிறிய மாற்றத்தினால் பெரிய வித்தியாசத்தை உருவாக்க முடியும். இது எமது கடமை என்று அந்தக் காணொளியில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Source link

The post பொதுமக்கள் உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் –  உலக சுகாதார ஸ்தாபனம் appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

37 Views