தொழில் அதிபரை மணந்தார் நடிகை காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால், தொழிலதிபர் கெளதம் கிட்சிலு என்பவரை மும்பை தாஜ் ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டுள்ளார். 

நெருங்கிய சொந்தங்கள் சுமார் 50 பேர் மட்டுமே கலந்து கொண்ட அவரது திருமண நிகழ்ச்சியின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ளார்.

திருமணம் தொடர்பான தகவல்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்த காஜல் அகர்வாலுக்கு அவரது ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் கடந்த இரு தினங்களாக வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தனது திருமணத்துக்கு முந்தைய சடங்குகளான மருதாணியிடுதல், நலுங்கு வைத்தல் போன்ற புகைப்படங்களை #kajgautkitched என காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார்.

தற்போது இயக்குநர் சங்கரின் இந்தியன்-2 படத்தில் முக்கிய பாத்திரத்தில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். 

திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று காஜல் கூறியுள்ளமையும் சிறப்பம்சமாகும்.

Source link

The post தொழில் அதிபரை மணந்தார் நடிகை காஜல் அகர்வால் appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

47 Views