துருக்கி பூகம்பம்: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

துருக்கியின் மேற்கு பகுதியிலுள்ள ஏகன் தீவுகளில் 7.0 என்ற ரிச்டர் அளவிலான  சக்தி வாய்ந்த பூகம்பமொன்று நேற்றைய தினம்  ஏற்பட்டது. இப் பூகம்பத்தினால் கடற்கரையோரத்திலுள்ள  இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக அப்பகுதியிலுள்ள  20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதடைந்தன. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் எனவும், முதற்கட்டமாக 14 பேர் உயிரிழந்ததாகவும், 419 பேர் காயம் அடைந்ததாகவும் துருக்கி அரசு தெரிவித்தது.

இந்நிலையில்  கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாகவும், 786 பேர் காயமடைந்துள்ளதாக பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் இஸ்மிர் நகரமே உருக்குலைந்து போயுள்ளது.

இந் நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

துருக்கியில் இப் பூகம்பத்திற்குப்  பின்னர் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும்   இவற்றில் 4க்கு கூடுதலாக ரிச்டர் அளவு கொண்ட நில அதிர்வுகள் 23 முறை ஏற்பட்டுள்ளன என்றும்  அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

45 Views