திருகோணமலையில் விகாரதிபதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை….

திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லங்காதுறையில் உள்ள விகாரையின் விகாரதிபதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

லங்காதுறையில் உள்ள பக்வத விகாகரையின் விகாராதிபதியே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் தூக்கில் தொங்கிய நிலையில் விகாராதிபதியை சடலமாக எடுத்துள்ளனர்.

எனினும் குறித்த தேரரின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரை கண்டறியப்படவில்லை.

குறித்த விகாராதிபதியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

The post திருகோணமலையில் விகாரதிபதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை…. appeared first on Leading Tamil News Website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

46 Views