தான் இன்னும் பயத்தில் இருப்பதாக பேட்டி அளித்த தமன்னா

வேகம் குறைந்து விட்டது... பயத்தில் இருக்கும் தமன்னா

தமன்னா
நடிகை தமன்னா கொரோனா தொற்றில் சிக்கி மீண்டுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

நான் உடற்பயிற்சியில் ரொம்ப அக்கறை எடுப்பது எல்லோருக்கும் தெரியும். எப்போதும் உடற்பயிற்சிகள், யோகா செய்து கொண்டே இருப்பேன். படப்பிடிப்போடு உடற்பயிற்சியும் எனது வாழ்க்கையில் ஒன்றாக இருந்தது. கொரோனா ஊரடங்கிலும் உடற்பயிற்சிகள் செய்து புகைப்படங்களை வெளியிட்டேன். ரசிகர்கள் நண்பர்களுக்கும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தி வந்தேன்.
தமன்னாஆனால் எனக்கு கொரோனா தொற்று வந்து விட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமாகி இப்போது திரும்பி விட்டேன். மறுபடியும் உடற்பயிற்சியை ஆரம்பித்து விட்டேன். ஆனால் எனது வேகம் குறைந்து விட்டது. முன்புபோல் செய்ய முடியவில்லை. கொஞ்ச நேரத்திலேயே சோர்வாகி விடுகிறேன். இதனால் மிகவும் பயந்து போய் இருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்ப முயற்சிக்கிறேன்.
கொரோனா வந்தால் மிகவும் சோர்வாகி விடுவோம். மீண்டும் சக்தியை கொண்டு வருவது ரொம்ப கஷ்டம். எனவே குணமான பிறகும் உடற்பயிற்சியை விட்டு விடாமல் பழைய நிலைக்கு மாற உழைக்க வேண்டும்.
இவ்வாறு தமன்னா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

36 Views