கருக்கலைப்பு தடைச்சட்டம் தொடர்பான தனது நிலைப்பாட்டை மாற்றினார் போலந்து ஜனாதிபதி!

போலந்தில் (Poland) காணப்படும் கருக்கலைப்பு தடைச்சட்டத்திற்கு எதிராக அண்மைக் காலமாக ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த சட்டத்தில் கருவில் ஏற்படும் குறைபாடுகளைக் காரணம் காட்டி கருக்கலைப்பு செய்வது சட்டத்திற்கு விரோதமானது என அரசியலமைப்பு தீர்ப்பாயம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது.

இந் நிலையில் இது பெண்களின் உரிமைகளுக்கு எதிராகவுள்ளதாகக் கூறி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறன.

குறிப்பாக தலைநகர் வார்சாவிலுள்ள ஆளுங்கட்சி தலைவர் கசின்ஸ்கியின் வீட்டின் அருகே திரண்ட ஆயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் துடா (Andrzej Duda) கருவுற்றிருக்கும் கருவை கருக்கலைப்பு செய்ய பெண்களுக்கு உரிமை இருக்க வேண்டும்.

ஒரு பெண்ணின் இத்தகைய செயல்களுக்கு சட்டம் தேவையாக இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

41 Views