மேல் மாகாணத்தில் 412 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
Published by T. Saranya on 2020-10-27 14:37:33
மேல் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 412 அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
அவர்களில், 57 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருப்பதாகவும், 355 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேல் மாகாணத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மேல் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 10 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
The post மேல் மாகாணத்தில் 412 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் appeared first on Helanews.