நுரையீரலில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றுவதற்கு இந்த உணவுகளை இவ்வாறு உட்கொள்ளுங்கள்..!

ஒருவரது உடல் ஆரோக்கியம் உண்ணும் உணவுகளைப் பொறுத்தது. நல்ல ஊட்டச்சத்துள்ள சீரான உணவை உண்பது ஆரோக்கியமான எடையைப் பராமரிக்கவும் குறிப்பிட்ட சில ஆரோக்கிய பிரச்சனைகளின் ஆபத்தைக் குறைக்கவும் உதவும். இது உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.
ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த அதிகப்படியான உணவுகள் உண்பது காற்று மாசுபாட்டினால் ஏற்படும் விளைவுகளைக் குறைக்க உதவுவதோடு,நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.இப்போது மாசுபட்ட காற்றினை சுவாசித்து நுரையீரலில் தேங்கியுள்ள அழுக்குகளை வெளியேற்றி சுத்தம் செய்ய உதவும் சில உணவுகளைக் காண்போம்.
பீட்ரூட்-நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் போன்ற நுரையீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு பீட்ரூட்டானது உடலின் செயல்திறன் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. பீட்ரூட் மற்றும் பீட்ரூட் கீரைகள் இரண்டுமே நைட்ரேட்டுகள் உள்ளிட்ட சேர்மங்களால் நிறைந்தவை. இது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவி புரியும். மேலும் பீட்ரூட் கீரைகளில் நுரையீரல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் மக்னீசியம்,பொட்டாசியம்,வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன.
ஆப்பிள்-இந்த சுவையான பழத்தில் நார்ச்சத்து அதிகமாகவும்,கலோரிகள் குறைவாகவும் உள்ளது. அதோடு இதில் சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும் வைட்டமின்கள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. அதிலும் ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ப்ளேவோனாய்டு நுரையீரலை சுத்தம் செய்ய உதவுகிறது.
பச்சை இலைக் காய்கறிகள்-பச்சை இலைக் காய்கறிகளான ப்ராக்கோலி,முட்டைக்கோஸ்,காலிஃப்ளவர்,கேல் போன்றவற்றில் லிக்னன்கள் அதிகம் உள்ளன. இலை ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. எனவே இத்தகைய காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
தேன்-தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால் இது சுவாச பிரச்சனைகளால் ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்க உதவுகிறது. ஆய்வுகளின் படி தேனில் ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. தேனை தினமும் சாப்பிட்டு வந்தால் சுவாச பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அதிலும் ஆய்வு ஒன்றில் இரவு தூங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் தேன் சாப்பிடுவது இருமலில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு தூங்குவதில் சந்திக்கும் பிரச்சனைகளும் நீங்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 Views