கேலக்ஸி இசட் ப்ளிப் ற்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் சாம்சங் நிறுவனம்

கேலக்ஸி இசட் ப்ளிப்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ரூ. 39,009 தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை மகேஷன் டெலிகாம் வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் கேலக்ஸி இசட் ப்ளிப் விலை ரூ. 1,08,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
எனினும், தற்சமயம் இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு ரூ. 39,009 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் ஸ்மார்ட்போன் ரூ. 69,990 விலையில் கிடைக்கிறது. இது குறுகிய கால சலுகை ஆகும்.

சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி இசட் ப்ளிப் மாடலில் 6.7 இன்ச் புல் ஹெச்டி 1080×2636 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.1 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், அட்ரினோ 650 ஜிபியு கொண்டுள்ளது.
மேலும் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி, 12 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 10 எம்பி செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3300 எம்ஏஎஹ்ச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.