விசேட அதிரப்படையின் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று
Published by T. Saranya on 2020-10-26 11:38:32
முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு பிரிவின் விசேட அதிரப்படையின் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸ், விசேட அதிரடிப் படையின் மூன்று முகாம்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதென விசேட அதிரடிப் படையின் கட்டளை தளபதி பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி, களனிய, ராஜகிரிய மற்றும் களுபோவிலவில் உள்ள விசேட அதிரப்படையின் முகாம்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குறைந்தது 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முகாம்களுக்கு மீன் வாங்குவதற்கு பேலியகொடை மீன் சந்தைக்கு சென்ற வேளை அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
The post விசேட அதிரப்படையின் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று appeared first on Helanews.