வவுனியா பிரதேச செயலகத்தில் கால்கடுக்க நின்ற மக்கள்

Published by T. Saranya on 2020-10-26 17:13:44

வவுனியா பிரதேச செயலகத்தில் மக்கள் அதிகமாக பிரசன்னமாகின்ற போதிலும் போதுமான சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்படாமையினால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச செயலகம் 42 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ள நிலையில் மக்கள் பல்வேறு தேவைகளை நிறைவேற்றுவதற்காக தினமும் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதற்காக கை கழுவும் வசதி ஒன்றே அமைக்கப்பட்டுள்ளமையினால் அது அங்கு வரும் மக்களுக்கு போதுமானதாக காணப்படவில்லை.

இதன் காரணமாக வீதியோரத்தில் நீண்ட வரிசையில் கடும் வெயிலுக்கு மத்தியில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே மக்களின் நலன் கருதி சுகாதார வழிமுறைகைளை அதிகரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Source link

The post வவுனியா பிரதேச செயலகத்தில் கால்கடுக்க நின்ற மக்கள் appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 Views