பொதுமக்களுக்கே ஜாக்கிரதை…கொரோனாவிற்கு சவால் விட்டுவிட்டு தம்புள்ள சென்று நடமாடித் திரிந்தவருக்கு கொரோனா!!

சுகாதாரப் பரிசோதகர்கள் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் சுயதனிமைப்படுமாறு அறிவுறுத்தப்பட்டதை மீறி செயற்பட்ட வர்த்தகருக்கு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தனக்கு ஆரோக்கியமாக உடம்புள்ளதாக கூறி அவர் நடமாடித் திரிந்ததாக கூறப்படுகிறது.கடவத்த பிரதேசத்தின் கோணாவத்த பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.கடந்த 20ஆம் திகதி மகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பேலியகொட மின் சந்தைக்கு சென்று வந்ததன் அடிப்படையில் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவரை சுயதனிமையில் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.எனினும், 22,23,24ஆம் திகதிகளில் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு அவர் சென்றுள்ளார். அங்குள்ள வர்த்தக நிலையங்களிற்கும் சென்றுள்ளார். பிசிஆர் பரிசோதனை குறித்து பேசியபோது, தனக்கு ஆரோக்கியமான உடம்பு உள்ளதாகவும், அதனால் தனிமைப்பட தேவையில்லையென அங்குள்ளவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.நேற்று 25ஆம் திகதி கடவத்தையிலிருந்து அவர் தம்புள்ளைக்கு லொறியில் சென்று கொண்டிருந்த போது- மெல்சிறி பகுதியை லொறி அண்மித்த போது, அவருக்கு கொரோனா தொற்று உறுதியான தகவல் தொலைபேசி மூலம் வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து, உடனடியாக திரும்பி வந்து வீட்டில் இருந்துள்ளார்.அவர் சென்று வந்த அனைத்து கடைகளிலும் உள்ளவர்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தம்புள்ள நகரசபை பொது சுகாதார பரிசோதகர் பிரியந்தா டி சில்வா தெரிவித்தார்.இதேவேளை, இதுவரை தம்புள்ள பொருளாதார மையத்தில் சுமார் 200 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லையென்பது தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.சுகாதாரப் பிரிவினர் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி, பொறுப்புடன் நடப்பதே நமக்கும், நாட்டுக்கும் பாதுகாப்பானது என்பதை அனைவரும் நினைவில் வைத்திருப்பது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

28 Views