தலவாக்கலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

தலவாக்கலை பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் அசோக சேபால தெரிவித்தார். 

தலவாக்கலை தெவிசிறிபுர பகுதியைச் சேர்ந்த 44 வயது மதிக்கதக்க ஒருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. 

இவர் பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புபட்டு  தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். 

இவருக்கு 24.10.2020 சனிக்கிழமையன்று பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பீ.சீ.ஆர் பரிசோதனை  அறிக்கை 25.10.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியானபோது இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இவரின் வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்த மாணவி ஒருவர் க.பொ. உயர் தர பரீட்சைக்கு தோற்றுகின்றார். இவர் தனிமைப்படுத்தப்பட்டு கொட்டக்கலை பிரதேச சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தலவாக்கலை பொலிஸாரின் வழிகாட்டலுக்கமைவாக பரீட்சைக்கு தோற்றுகின்றார். 

எனவே தலவாக்கலை நகரை அண்டிய மக்கள் வீணாக அச்சம் அடைய தேவையில்லை என தெரிவித்த தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் அசோக சேபால தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கான வாய்ப்புகள் இதுவரை ஏற்படவில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Source link

The post தலவாக்கலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 Views