கொல்கத்தாவுடன் இன்று மோதல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப்பின் வெற்றி நீடிக்குமா?

கொல்கத்தாவுடன் இன்று மோதல் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்பின் வெற்றி நீடிக்குமா?

மார்கன் – லோகேஷ் ராகுல்

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் 46-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா அணி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நிலைமை அந்த அணிக்கு உள்ளது.

கொல்கத்தா அணி ஏற்கனவே 2 ரன்னில் பஞ்சாப்பை தோற்கடித்து இருந்தது. இதனால் மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

பஞ்சாப் 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக 4 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் வெற்றி இன்றும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயம் பஞ்சாப்புக்கு உள்ளது. கொல்கத்தாவுக்கு பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் அந்த அணி இருக்கிறது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம் காணும். இதனால் வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள். இதன் காரணமாக போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

இரு அணிகளும் மோதிய ஆட்டங்களில் கொல்கத்தா 18-ல், பஞ்சாப் 8-ல் வெற்றி பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

32 Views