காலி மாவட்டத்திற்குள்ளும் புகுந்தது கொரோனா.!! ஒரே நாளில் இனம் காணப்பட்ட பெருமளவு தொற்றாளர்கள்.!!

காலி மாவட்டத்தில் இதுவரை 43பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.கொழும்பு துறைமுகம் மற்றும் பேலியகொட மீன் சந்தை பகுதிகளுக்கு சென்று, திரும்பியவர்களினாலேயே கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை காலியிலும் இவ்வாறு அதிகரித்தமைக்கு காரணம் என தொற்றுநோயியல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.இந்த விடயத்தினை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் வேணுர கே.சிங்காராய்ச்சி தெரிவித்ள்ளார்.தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கும் போது;

கொழும்பு துறைமுகத்துடன் தொடர்புபட்ட 32பேருக்கும் பெலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்ட 11பேருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 24ஆம் திகதி பலபிட்டிய- கடுவில பகுதியில் 582 பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களில் 362 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் ,50 பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. மேலும் 175 பி.சி.ஆர்.சோதனைகள் செய்யப்பட உள்ளன.
இதுவரை எல்பிட்டியவில் ஒருவருக்கும் கரண்தெனியவில் ஒருவருக்கும் இதுருவேயில் 2பேரும் ரத்கமவில் 4 பேருக்கும் காலி நகராட்சி பகுதியில் 4 பேருக்கும் சுகாதாரப் பிரிவின் பலபிட்டி வைத்திய அதிகாரிகள் பிரிவுக்குள் 32 பேருக்கு இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

31 Views