களுத்துறையில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு

களுத்துறை மாவட்டத்தில் பேருவளை, பயாகல, அளுத்கமவுக்கான ஊடரங்கு நாளை (திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களுத்துறை- மீகஹதென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5 கிராமங்களுக்குப் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதவத்த, மகாலந்தாவ தெற்கு, மகுருமஸ்வில, குலா விட்ட வடக்கு மற்றும் குலாவிட்ட தெற்கு ஆகிய 5 கிராமங்களுக்கே இவ்வாறு போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெபிலியவத்த கிராமத்திலும் சுமார் 50 வீடுகளுக்குப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

23 Views