கடந்த 24 மணிநேரத்தில் 152 பேர் கைது
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேர காலப் பகுதியில் 152 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதன்போது 16 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 4 தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 1,076 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 156 வானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
The post கடந்த 24 மணிநேரத்தில் 152 பேர் கைது appeared first on Helanews.