ஒரே நாளில் 9189 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 9,189 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதுவரை மொத்தமாக நான்கு லட்சத்து 55 ஆயிரம் பிசிஆர் பரிசோதனைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முப்படையினரால் கொண்டு நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களின் ஊடாக 55 ஆயிரத்து 426 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, இன்று முற்பகல் அளவில் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து 4,400ஆக உயர்வடைந்துள்ளது. அவர்களுள் 1041 பேர் ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்கள்.
இதனிடையே, இலங்கையில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,872 ஆக காணப்படுகிறது. அவர்களுள் 3,933 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். தொற்றின் காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
The post ஒரே நாளில் 9189 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை appeared first on Vakeesam.