ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் சுற்றுத்தொடர் கடந்த மாதம் 19ம் திகதி முதல் எட்டு அணிகள் மோதும் 56 லீக் ஆட்டங்கள் ஷார்ஜா, துபாய், அபுதாபி நகரங்களில் நடைபெற்று வருகின்றன.

10ம் திகதி இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிளே-ஆஃப்ஸ் சுற்றுகள் எங்கே? இறுதிப் போட்டி எங்கே? என்ற விபரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

நவம்பர் 5ம் திகதி குவாலிபையர்-1 (பாயின்ட் டேபிளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள்) துபாயில் நடைபெறுகிறது.

நவம்பர் 6ம் திகதி எலிமினேட்டர் (3-வது மற்றும் 4-வது இடம் பெறும் அணிகள்) அபு தாபியில் நடக்கிறது.

நவம்பர் 8ம் திகதி குவாலிபையர் 2 (குவாலிபையர் 1 தோல்வி – எலிமினேட்டர் வெற்றி) அபு தாபியில் நடக்கிறது.

நவம்பர் 10ம் திகதி (குவாலிபையர் 1 வெற்றி – குவாலிபையர் 2 வெற்றி) இறுதிப் போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

The post ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் appeared first on Swaasam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 Views