ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 76 பேர் கைது

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை ஆயிரத்து 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேர காலப் பகுதியில் 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதன்போது 16 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 4ஆம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை ஆயிரத்து 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 156 வானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 Views