20 ஆவது திருத்தம் வெளிநாட்டுத்தலையீடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கும்: சமூக நீதிக்கான தேசிய இயக்கம்

(நா.தனுஜா)
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த யோசனை இரட்டைக்குடியுரிமை கொண்ட ஒருவர் நாட்டை நிர்வகிப்பதற்கான சந்தர்ப்பத்தை  வழங்குவதன் ஊடாக வெளிநாட்டுத்தலையீடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

எது எவ்வாறெனினும் பாராளுமன்ற உறுப்பினர்கள்  20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றத்தான் போகின்றார்கள் என்றால், அதிலுள்ள நாட்டிற்கு வெகுவாக தீங்கேற்படுத்தக்கூடிய கூறுகளையேனும் நீக்கவேண்டும் என்றும் அந்த இயக்கம் வலியுறுத்தியிருக்கிறது.

மக்களின் அபிப்பிராயத்திற்குப் புறம்காக நாட்டின் நிர்வாகத்தை இரட்டைக்குடியுரிமையை கொண்டவரிடம்  கையளிப்பதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சியைத் தோற்கடிப்போம் என்ற தலைப்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

வேறொரு நாட்டில் குடியுரிமையைக் கொண்டவரிடம் இலங்கையை நிர்வகித்தல் மற்றும் சட்டங்களை உருவாக்குவதற்கான பொறுப்பைக் கையளிப்பதற்கு ஏற்புடைய வகையில் அரசியலமைப்பில் திருத்தத்தை ஏற்படுத்துவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும். தேசிய பாதுகாப்பிலும் நாட்டின் நலனிலும் அக்கறைகொண்ட எந்தவொரு பிரஜையினாலும் இந்தத் திருத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறான திருத்தங்களை மேற்கொள்வதென்பது நாட்டின் 21 மில்லியன் மக்களின் அபிலாசைகளை அவமதிக்கும் விதமான செய்கையாகும்.

நீதியமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், எமது நாட்டின் தேசிய அடையாளமாக விளங்கும் வாரியப்பொல ஸ்ரீசுமங்கல தேரர் உள்ளடங்கலாக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய பலரையும் அவமதிக்கும் வகையில் இரட்டைக்குடியுரிமை கொண்ட ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக மாத்திரமன்றி, நாட்டின் ஜனாதிபதியாவதற்குக்கூட வாய்யப்பளிக்கும் சரத்து 20 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், அதனூடாக நாட்டின் மிகமுக்கிய பதவி நிலைகளுக்கு இரட்டைக்குடியுரிமை கொண்ட ஒருவரை நியமிப்பதன் பாரதூரத்தன்மை தொடர்பில் சிந்தித்துப்பார்க்க வேண்டும். அதேபோன்று ஒவ்வொரு நாடுகளினதும் பிரஜைகள், அந்நாடுகளுக்கு விசுவாசமாக  சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள வேண்டியிருக்கும் நிலையில் அதன் தீவிரத்தன்மை குறித்தும் கவனம் செலுத்தவேண்டும்.

எனவே இந்த நிலைவரம் தொடர்பில் அனைத்து மதத்தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளடங்களாக நாட்டுமக்கள் அனைவரும் தமது அவதானத்தைச் செலுத்துவார்கள் என்று நம்புகின்றோம். அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கையொன்றை முன்வைக்க விரும்புகின்றோம். 

Source link

The post 20 ஆவது திருத்தம் வெளிநாட்டுத்தலையீடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கும்: சமூக நீதிக்கான தேசிய இயக்கம் appeared first on Helanews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Views