20வது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றம்

அரசியலமைப்பின் 20வது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 91 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் விவாதத்தைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் 213 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில் ஆதரவாக 156 வாக்குகளும், எதிராக 65 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நசீர் அஹமட், பைசல் காசிம், M.S. தௌபிக் ஐக்கிய மக்கள் சக்தியின் இஷாக் ரஹ்மான், டயானா கமகே தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஷப்ரி ரஹீம் ஆகியோா் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் உறுப்பினர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் , ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோா் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

இரண்டாவது வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட நிலையில், குழு நிலை சந்தர்ப்பத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது #20வதுதிருத்தசட்டமூலம் #வாக்கெடுப்பு #நிறைவேற்றம்

The post 20வது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றம் appeared first on GTN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Views