ரெலோ நியாஸ் கைது

முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் ஆகியவற்றை பயன்படுத்தி வங்கிகளுக்கு வருபவர்களின் ஏ.ரி.எம். காட்டினை பெற்று நுணுக்கமாக திருடிவந்த ரெலோ நியாஸ் என்பவரை  களுவாஞ்சிக்குடி காவல்துறையினா் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் புறநகர்பகுதி மற்றும் களுவாஞ்சிக்குடி பகுதியில்  7, 8 ,9 ,திகதிகளில்  அரச வங்கி கிளைகளில்   பென்சன்(pention)  சம்பளத்தை  எ.ரி.எம் அட்டையின் ஊடாக பெற வரும் வயோதிபர்களை இலக்கு வைத்து குறித்த திருட்டு இடம்பெற்றுள்ள நிலையில் இன்று(22) மாலை கைதானார்.

காத்தான்குடி பகுதியை வசிப்பிடமாக கொண்ட 41 வயதுடைய இச்சந்தேக நபர் ஏலவே கண்டெடுத்த அரச வங்கி  ஏ.ரி.எம் அட்டை ஒன்றினை பெற்று இளைப்பாறிய சம்பளத்தை பெற வருகின்ற நபரிடம் உதவி செய்வதாக பாசாங்கு செய்து அவர்களது கணக்கு பெறுமதியை அறிகின்றார்.

அத்துடன் உதவி கேட்ட நபரின் கணக்கு பெறுமதியை பெற்றுக்கொடுப்பதுடன் வங்கி கணக்கு நிலுவையையும் அறிகின்றார்.அத்துடன்  தன்னிடம் ஏலவே கண்டெடுத்த ஏ.ரி.எம் அட்டையை மாற்றி கொடுத்து அவர்களை வழி அனுப்பி வைப்பதுடன் பின்னர் அவ் ஏ.ரி.எம்  காட்டினை மற்றுமொரு வங்கிகிளைக்கு எடுத்துச்சென்று பணத்தினை பெற்றுக்கொள்கின்றார்.

தொடர்ந்து  மேற்கூறிய செயற்பாட்டினை தொடர்ச்சியாக மேற்கொண்டு 5 பேரிடம் இவ்வாறு ஏ.ரி.எம் இயந்திரத்தில்  பணத்தினை பெற்று தருவதாக கூறி இவ்வாறு நுதனமாக கொள்ளையடித்து சுமார் 1 இலட்சத்து 80 ஆயிரத்தை கொள்ளையடித்து வந்துள்ளதுடன்  கொள்ளை அடித்த பணத்தில் ஹெரோயின் போதைப்பொருளையும் கொள்வனவு செய்துள்ளார். இதனை அடுத்து சிசிசடிவி கமராவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து சந்தேக நபர்   கைதானார்.

பல்வேறு குற்றங்களுக்காக 11 வருடங்களாக சிறையில் இருந்த குறித்த சந்தேக நபர் தொடர்பாக   குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் பெரேரா,களுவாஞ்சிக்குடி காவல்நிலைய குற்றத்தடுப்பு சார்ஜன்ட் றவூப்  மேற்கொண்ட புலனாய்வு தகவலுக்கமைய  களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவி காவல்துறைஅத்தியட்சகர் பாறுக்கின் வழிகாட்டலில் இக்கைது நடவடிக்கையில் பங்கேற்றனர்.

கைதான சந்தேக நபரிடம் 5 ஏ.ரி.எம்.அட்டைகள் ஹெரோயின் போதைபொருள் 2 கிராம் 90 மில்லி கிராம்  என்பன மீட்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகாக பாரப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. #ரெலோநியாஸ் #கைது #முகக்கவசம் #தலைக்கவசம் #ஏரிஎம்அட்டை #கைது #வயோதிபர்

The post ரெலோ நியாஸ் கைது appeared first on GTN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Views