20ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பு – ஐக்கிய மக்கள் சக்தியின் வாகன பேரணி.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (21.10.20) மற்றும் நாளை (22.10.20) ஆகிய தினங்களில் எதிரணி அதிகப்பட்ச நடவடிக்கையை மேற்கொள்ளும் என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களில் விவாதம் மேற்கொண்டு நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்க்கும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்த சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வாகன பேரணியாக நாடாளுமன்றுக்கு வந்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
The post 20ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பு – ஐக்கிய மக்கள் சக்தியின் வாகன பேரணி. appeared first on GTN.