20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக யாழில் தீப்பந்தம் ஏந்திப் போராட்டம்

20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக யாழில் தீப்பந்தம் ஏந்திப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான இளைஞர் செயற்பாட்டுக் குழு அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தது.

அதற்கமைய வடமராட்சி இளைஞர்கள் வல்லைப் பாலத்தில், நேற்று இரவு 08:00 மணியளவில் ஒன்றுகூடி தீப்பந்தம் ஏந்தி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மின்விளக்குகளை அனைத்து தீபம் ஏற்றி தனது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர்களும் மெழுகுவர்த்திகள் ஏந்தி 20வது திருத்தச்சட்ட அமுலாக்கத்துக்குக்கான தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தமது போராட்டம் குறித்த காணொளிகள் மற்றும் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

26 Views