ஷிகர் தவான் புதிய சாதனை

டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் ஆரம்ப ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளார்.

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த ஷிகர் தவான், நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் சதம் அடித்துள்ளாா். 

இதன்மூலம் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அடுத்தடுத்து இரு சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றுள்ளார்.

அதேபோல், ஒரு ஐ.பி.எல். தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதம் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையும் ஷிகர் தவான் பெற்றுள்ளார். ஒரு ஐ.பி.எல். தொடரில் 4 சதங்களை விராட் கோலி அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #ஷிகர்தவான் #சாதனை #ஐபிஎல் #IPL

The post ஷிகர் தவான் புதிய சாதனை appeared first on GTN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

34 Views