விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிப்பு

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு @ItsRithikRajh என்ற ருவிட்டா் சமூக வலைத்தளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல்துறையினா் மேற்அகொண்ட தீவிர விசாரணையில் தெரியவந்துள்ளது,

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் தயாாிக்கப்பட்விருந்த 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிப்பதாக இருந்தநிலையில் . அதற்கு ந கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.

இந்த நிலையில் முத்தையா முரளிதரன் விஜய் சேதுபதியிடம் 800 என்ற திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என விடுத்த வேண்டுகோளையடுத்து விஜய் சேதுபதி அத்திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக்கொண்டார்.

இதற்கிடையில் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து, நபர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆபாச கருத்துகளை பதிவிட்டிருந்தார்.

இதற்கு பலதரப்பினரும் கடும் எதிா்ப்புத் தொிவித்து வந்த நிலையில் காவல்துறை ஆணையாளா் மகேஷ்குமார்அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில், விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த நபர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியிட்டார்.

கலகத்தை தூண்டுதல், ஆபாச கருத்து பதிவிடுதல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற 3 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சைபர் கிரைம் காவல்துறையினா் நடத்திய தீவிர விசாரணையில் நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது தெரியவந்துள்ளது. மிரட்டல் விடுத்தவரின் IP முகவரி மூலம் இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இண்டர்போல் உதவியுடன் இலங்கையில் உள்ளவரை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினா் நடவடிக்கை எடுத்து வருவதாக தொிவித்துள்ள சைபர் கிரைம் காவல்துறையினா் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். #விஜய்சேதுபதி #மிரட்டல் #இலங்கை #சைபர்கிரைம் #முரளிதரன்

மூலம் தினத்தந்தி

The post விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிப்பு appeared first on GTN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Views