தரம்- 05புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை ஆரம்பம்!

இம்முறை 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்து பணிகள் நாளை (22) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டம் மற்றும் குளியாப்பிட்டிய கல்வி வலயத்தை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நாளை முதல் 27 ஆம் திகதி வரையில் 39 மத்திய நிலையங்களில் 391 பேரினால் இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்துப் பரிசோதகர்களுக்கும் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு வருகை தருமாறு குறுஞ்செய்தி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் எதாவது விசாரணைகள் இருப்பின் 011 2 785 231 , 011 2 785 216, 011 2 784 037 என்ற இலக்கங்களுக்கு அழைப்பு விடுக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

40 Views